சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேகத்தில் சீர்வரிசையுடன் கலந்துகொண்ட முஸ்லிம் மக்கள்: இது புதுக்கோட்டை நெகிழ்ச்சி | Pudukkottai: muslim peoples participating murugan temple fest

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியில் நடைபெற்ற சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேகம் நிகழ்வில், சகோதரத்துவத்துடன் முஸ்லிம் மக்கள் சீர்வரிசையுடன் கலந்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.புதுப்பட்டினம் வள்ளி தேவசேநா உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலின் அனைத்து பகுதிகளிலும் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. பிப்.17-ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி கும்பாபிஷேகம் நேற்று 6-ம் கால யாக பூஜைகளுடன் நிறைவுற்றதையடுத்து புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு கும்பத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனிடையே, கோயில் கும்பாபிஷேகம் நிகழ்வையொட்டி, ஆர்.புதுப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தைச் சேர்ந்தோர் நேற்று இரவு குதிரை, மேலதாள இசை முழங்க ஊர்வலமாக வந்து கோயிலுக்கு சீர் வரிசை பொருட்கள் கொண்டுத்தனர்.

16454469253055

முன்னதாக, கோயிலுக்கு வந்த முஸ்லிம் மக்களை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் வரவேற்று, கோயிலில் அமரச் செய்து உபரிசரித்தனர்.

கோயில் கும்பாபிஷேகத்துக்கு வருகை தந்தோரை வரவேற்று பிரதான சாலையில் ஜமாத் சார்பில் பேனர் வைக்கப்பட்டதோடு, வந்திருந்தோருக்கு குடிநீர் பாட்டில்களும் விநியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமூக நல்லிணக்கத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியால் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Exit mobile version