தமிழகத்தில் சில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு | chance for rain in tamil nadu today

1026355

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு.

தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம் , புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன் 26) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல, வரும் 27, 28, 29-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 25-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 3 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை, நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்று குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ.வேகத்திலும் சூறாவளிக் காற்றுவீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி!

Exit mobile version