ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

images 97

கோடுகளின்
கவிதை
ஓவியம்

சொற்களின்
ஓவியம்
கவிதை

மதிக்கப்படுவதில்லை
திறமைகள் இருந்தும்
குடிகாரர்கள்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
அரசு ஊழியருக்கு
வணிகராக ஆசை

ஊழல் மறைக்க
ஊழல் செய்யும்
அரசியல்வாதிகள்

பழமையானாலும்
விறகாவதில்லை
வீணை

ஜடப் பொருள்தான்
மீட்டத் தெரியாதவர்களுக்கு
வீணை

அம்புகள் படாத வில்
விழி அம்புகள் அட்ட வில்
வானவில்

புகழ் அடையவில்லை
பிறந்த பூமியில்
புத்தன்

ஒருபோதும் மறப்பதில்லை
உணவு இட்டவர்களை ‘
நாய்கள்

வெடி வெடிப்பதில்லை
சில கிராமங்களில்
பறவைப்பாசம்

மனிதனை விட
அறிவாளிகள் விலங்குகள்
சுனாமியில் தப்பித்தன

அறிவுறுத்த வேண்டி உள்ளது
மனிதனாக வாழ
மனிதனை

அடிக்கரும்பு
அதிக இனிப்பு
மண்ணுக்கு அருகில்

மேய்ப்பன் இன்றியே
இல்லம் வந்தன
ஆடுகள்

நிலத்தில் பிறந்து நீரில் வாழ்ந்து
நிலத்தில் முடியும்
படகு

மனிதனின் கால் பட்டதால்
களங்கமான
நிலவு

நன்றி
கவிஞர் இரா.இரவி 
Exit mobile version