“கலாம்” கவிஞர் மா.கணேஷ்

Abdul kalam tamil deepam ganesh

அக்னி

புத்திரர்

கலாம்..!

அக்னிச் சிறகின்

ஆசான்

கலாம்..!

அணு சோதனையால்

அகிலத்தை பார்க்க வைத்தவர்

கலாம்..!

திருப்பு முனையில்

திருப்பம் தந்தவர்

கலாம்..!

சோதனைகளை

சாதனையாக்கியவர்

கலாம்..!

இடும்பைக்கு இடும்பை

தந்தவர்

கலாம்..!

காலத்தை

வென்றவர்

கலாம்..!

முயற்சியின் முழு

உருவம்

கலாம்..!

வீணை மீட்டிய

விஞ்ஞானி

கலாம்..!

விஞ்ஞானியாகவும் மெய்ஞானியாகவும்

இருந்தவர்

கலாம்..!

புனித பூமியின்

புதல்வர்

கலாம்..!

பன்முகம் கொண்ட

பகலவன்

கலாம்..!

எளிமையின்

சிகரம்

கலாம்..!

கனவு கானச்

செய்தவர்

கலாம்..!

இளைஞர்களின்

வழிகாட்டி

கலாம்..!

ஏவுகணையின்

தந்தையானவர்

கலாம்..!

ஒற்றுமையின்

உருவகம்

கலாம்..!

ஓய்வின்றி

உழைத்தவர்

கலாம்..!

வாய்மை

உடையவர்

கலாம்..!

நேர்மை

உடையவர்

கலாம்..!

எழுச்சி

உடையவர்

கலாம்..!

நன்றி
கவிஞர் மா.கணேஷ்
Exit mobile version