அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 22-ந்தேதி தொடக்கம்

202009081744005644 Tamil News Anna University final year semester start semptember 22 SECVPF1

இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 22-ந்தேதி முதல் செப்டம்பர் 29-ந்தேதி வரை நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் இறுதி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படாது என்று மத்திய அரசு தெரிவித்தது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 22-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


தேர்வுகள் இணைய வழி மூலம் நடத்தப்படும் என்றும், தேர்வுக்கு கேமரா, மைக்ரோ போன் வசதி கொண்ட ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்றும், விடையைத் தேர்வு செய்யும் வகையிலான கேள்வித்தாள் தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுக்கு முன் மாதிரி தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Source : https://www.maalaimalar.com/news/topnews/2020/09/08174401/1865836/Anna-University-final-year-semester-start-semptember.vpf

Exit mobile version