“அ.ப.ஜை.அப்துல் கலாம்”

apj abdulkalam kavithai poem ganesh tamil deepam

அன்பால் அனைவரையும் வென்று…

ஆராய்ச்சியின் உச்சத்தை அடைந்து…

இராமேஸ்வரத்தில் பிறந்து…

ஈடுல்லா தலைவராய்…

உலக நாயகனாய் உயர்ந்து…

ஊரெல்லாம் புகழும்படி வாழ்ந்து…

எழுச்சி கொண்ட மனதால்…

ஏவுகணையின் தந்தையாக மாறி…

ஐயங்கள் பலவற்றை நீக்கி…

ஒற்றுமையின் உருவமாக நின்று…

ஓய்வின்றி இறுதிவரை உழைத்து…

ஔவையின் ஆத்திசூடி போல் வாழ்ந்து காட்டி…

எஃகுவென மனதை கொண்ட அய்யா கலாம்…

இன்றும் உயிராய் நம் உள்ளங்களில் வாழ்ந்துவருகிறார் 🙏🏻🙏🏻🙏🏻

நன்றி
கவிஞர் மா.கணேஷ்
Exit mobile version