ஸ்ரீபெரும்புதூரில் ‘ஐபோன் 13’ உற்பத்தியை தொடங்கியது ஆப்பிள் நிறுவனம்

787034

787034

சென்னை: ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ‘ஐபோன் 13’ மாடல் போன் உற்பத்தியை சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தொழிற்சாலையில் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் டிஜிட்டல் சாதன பயனர்களிடையே பிரபலமானது, அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள். செல்போன், லேப்டாப் என பல சாதனங்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் ‘ஐபோன் 13’ உற்பத்தியை ஆப்பிள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தொழிற்சாலையில் இந்த உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Exit mobile version