மகாகவி பாரதியார் ! கவிஞர் இரா .இரவி !

bharathiyar tamil deepam

தமிழுக்கு வளம் சேர்த்தவன்
தமிழென என்றும் நிலைத்தவன்
மகாகவி

மூடநம்பிக்கைகளை
முற்றாக வெறுத்தவன்
மகாகவி

தாழ்த்தப்பட்ட சகோதரனுக்கு
பூணூல் அணிவித்தப் புனிதன்
மகாகவி

சாதி வேற்றுமைகளுக்கு
சாவு மணி அடித்தவன்
மகாகவி

அக்கிரகாரத்தில் பிறந்த
அதிசிய மாமனிதன்
மகாகவி

பாட்டால் கோட்டைக் கட்டி
பரங்கியரின் கொட்டம் அடக்கியவன்
மகாகவி

முறுக்கு மீசைக்காரன்
முத்தமிழுக்குச் சொந்தக்காரன்
மகாகவி

சரித்திரம் படைத்த
சகலகலா வல்லவன்
மகாகவி

நூற்றாண்டு கடந்து வாழும்
கற்கண்டு கவிதைக் குன்று
மகாகவி

பெண்கள் விடுதலைக்கு
வித்திட்ட முதல்ப் பாவலன்
மகாகவி

சேதுபதி பள்ளியில் பணியாற்றி
மதுரைக்குப் புகழ் சேர்த்தவன்
மகாகவி

வயிற்றை விட இதயத்தை
பெரிதாய் மதித்தவன்
மகாகவி

சமரசம் செய்து கொள்ளாத
தன்மானச் சிங்கம்
மகாகவி

உடலால் மறைந்தாலும்
பாடலால் என்றும் வாழ்பவன்
மகாகவி

நன்றி
கவிஞர் இரா.இரவி
Exit mobile version