இந்தி மொழி விவகாரத்தில் திமுகவை கண்டித்து பாஜக இன்று ஆர்ப்பாட்டம்: கடலூரில் அண்ணாமலை பங்கேற்பு | BJP protest today

888201

சென்னை: திமுகவின் இந்தி திணிப்பு நாடகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்.27-ல் (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, சென்னையில் 7 இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. கடலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார்.

கன்னியாகுமரியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கில் எம்.ஆர்.காந்தி, திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், புதுக்கோட்டையில் ஹெச்.ராஜா, தென்சென்னையில் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மத்திய சென்னை மேற்கில் மாநில செயலாளர்கள் கராத்தே ஆர்.தியாகராஜன், வடசென்னை கிழக்கில் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

நன்றி!

Exit mobile version