📚 உலக புத்தக தினம் 📚

books ganesh kavithai lots library tamil deepam


நூலகங்களுக்கு சென்றிடுவோம்
நூல்கள் பல கற்றிடுவோம்..!

அழகிய மனைகள் கட்டிடுவோம்
ஆங்கோர் புத்தக அறை அமைத்திடுவோம்..!

புத்தகங்கள் பல படித்திடுவோம்
புதுமைகள் பல படைத்திடுவோம்..!

காலம்பாராது நூல்களுடன் கழித்திடுவோம்
காவியங்கள் பல இங்கு படைத்திடுவோம்..!

புத்தகங்களுடன் இரண்டற கலந்துடுவோம்
புதிய கவிதைகள் பல புனைந்திடுவோம்..!

தரணி எங்கும் சென்றிடுவோம்
தரமான நூல்கள் பல தந்திடுவோம்..!

புதியதோர் புவியும் செய்வோம்
புத்தக சாலை எங்கும் அமைப்போம்…!

புத்தாண்டு பரிசுகளாய் இனி புன்னகை பொங்கும்
புத்தகங்களை பரிசாய் வழங்கிடுவோம்..!

நாடக நூல்கள் பல இயற்றிடுவோம்
நாடறிய நம் புகழ் எங்கும் பறப்பிடுவோம்..!

புதினங்களை பல படைத்திடுவோம்
புரவி வேகத்தில் புவி எங்கும் கொண்டு சேர்த்திடுவோம்..!

தன்னம்பிக்கை தளிர்த்து எழ
தலைசிறந்த நூல்களை  இனி நம்மில் புகுத்திடுவோம்..!

நன்றி
கவிஞர் மா.கணேஷ்
Exit mobile version