இமயமலையில் ஏறி சாதனை படைத்த ஆட்டிசம் பாதித்த கோவை சிறுவன்.!

கோவை மாவட்டத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி, விஜய கஸ்தூரி தம்பதியின் மகன் யதீந்திரா. இவர் ஆட்டிசம் எனும் மதிஇறுக்க குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தாலும், சிறுவயதிலேயே நீச்சல் பயிற்சி,கராத்தே உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுத்து வந்தனர் யதீந்திராவின் பெற்றோர். மேலும் மலையேறும் பயிற்சி மையத்தில் இணைந்து மலை ஏறும் பயிற்சியையும் அவர் மேற்கொண்டு வந்தார்.

tamildeepamautism

இமயமலை ஏறி சாதனை

பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் தன்முனைப்பாலும் தற்போது சாதித்தும் காட்டி இருக்கிறார். உத்தராகண்ட் மாநிலத்தில் இமய மலைத்தொடரில் 14 ஆயிரம் அடி உயரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். பியாஸ் குண்ட் மலையில் பயிற்சியாளர் ஆண்ட்ரூ ஜோன்ஸுடன் ஏறத் தொடங்கிய சிறுவன் யதீந்திரா, 4 நாட்களில் சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தை எட்டி அசத்தினார்‌. இந்தியாவில் இந்த சாதனையை படைத்துள்ள முதல் ஆட்டிசம் பாதித்த சிறுவனும் இவரே.

இமயமலையில் ஏறி சாதனை படைத்த ஆட்டிசம் பாதித்த கோவை சிறுவன்.!

Exit mobile version