அ முதல் ஃ வரை.. கொரோனா விழிப்புணர்வு கவிதை!

Corona kavithai poem 1

அகிலத்தை ஆட்டிவைக்கிறாய்…

ஆனந்தத்தை பறித்து வைக்கிறாய்…

இன்னல்களையே இங்கு தருகிறாய்…

ஈடுல்லா நோயாய் தோன்றிருக்கிறாய்…

உலகத்தையே பதர வைக்கிறாய்…

ஊரெல்லாம் பரவி வருகிறாய்…

எங்கும் உன்னையே பேச வைக்கிறாய்…

ஏன் எங்களை கலங்க வைக்கிறாய்…

ஐயங்கள் பல வளர்த்து வருகிறாய்…

ஒன்றாய் கூட்டம் கூடாதே என்கிறாய்…

ஓயாது எங்களை பயமுடுத்துகிறாய்…

ஔடதமே தனிமை என்கிறாய்…

அஃது தான் பாதுகாப்பும் என்கிறாய்…

முககவசம் அணிவோம்…!

பாதுகாப்பாய் இருப்போம்…!

தனித்திரு..!

விழித்திரு..!

நன்றி
கவிஞர் மா.கணேஷ்
Exit mobile version