தங்க மகன் நீ ! கவிஞர் காரை வீரையா

education youngster books kavithai tamildeepam

(அடுக்கடுக்காக படித்தால் உலகத்தில் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று தம்பிமார்களுக்கு அறிவுறுத்தும் பாடல். )

ஆளுக்கொரு வேலையுண்டு தம்பி
அடுக்கடுக்காக நீ படிச்சா இந்த
அவனியிலே உனக்குண்டு பெரிய வேலை
துடுக்குத்தனமா துள்ளித் திரியவேணும் – உன்
கவனமெல்லாம் படிப்பிலேதான் இருக்கணும்
எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு
கொந்தளிக்கிற மனசைக் கொஞ்சாதே தம்பி

தீயின்னு சொன்னா சுடுமா
பேயின்னு சொன்னா வருமா
தீயும் பேயும் ஒண்ணு
தாயும் தந்தையும் இந்த
உலகத்துக்கு இரண்டு கண்ணு
வானம் பூமிக்கு
மானம் காக்கும்
தங்க மகன் நீ உன்னைப்
பாராட்ட சீராட்டி ஓர்நாள்
வருவாள் கலைவாணி.

நன்றி
கவிஞர் வீரையா
Exit mobile version