அப்பா…. கவிஞர் மா.கணேஷ்

father appa kavithai tamil deepam

பார்த்தது இல்லை கண்ணீர் சிந்தி..

பார்த்தது உண்டு தன் பிள்ளைகளின் வளர்ச்சியால் ஆனந்த கண்ணீர் சிந்தி..

பார்த்தது இல்லை எதற்கும் ஆசைப்பட்டு..

பார்த்தது உண்டு தன் பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றி..

காட்டியது இல்லை கஷ்டங்களை பிள்ளைகளிடம்…

காட்டியது உண்டு கஷ்டம்மின்றி  பிள்ளைகளை வளர்த்து…

இருந்தது உண்டு உணவின்றி உண்ணாமல்..

இருந்ததில்லை உணவின்றி பிள்ளைகள் ஒருநாளும் உண்ணாமல்..

அணிந்தது உண்டு கிழிந்த ஆடைகள்..

அணியாமல் காத்தது உண்டு பிள்ளைகள் கிழிந்த ஆடையை…

கண்டித்தது உண்டடு அன்பாய் பிள்ளைகளை..

கண்கலங்க வைத்து கண்டதில்லை பிள்ளைகளை எப்பொழுதும்..

பார்த்தது இல்லை பாரினில் நேரினில் கடவுளை..

பார்த்தது உண்டு பாரினில் நேராய் தந்தையென்னும் கடவுளை..

நன்றி
கவிஞர் மா.கணேஷ்
Exit mobile version