விண்ணுல தேவதையே…

galaxy angel ganesh kavithai tamil deepam

வன்முறையானது
வானவில்லில்
உந்தன் வண்ணம்
கண்டு…!

தோகை விரித்தாடியது
வண்ணமயில்கள்
உந்தன் கார்முகில்
கூந்தல் கண்டு….!

காற்றுக்கிடையே
காரசாரம் உந்தன்
மூச்சுக்காற்றாய்
வருவதற்கு…!

சத்தங்களுக்கிடையே
நித்தம் சண்டை
உந்தன் செவிகளை
சேர்வதற்கு….!

இடித்துக் கொண்டு
முந்துகிறது இயற்கை
உந்தன் கண்களில்
காட்சி பட….!

வார்த்தைகளுக்கிடையே
வம்பு சண்டை உந்தன்
நாவில் வந்து அமர்வதற்கு…!

மதியொளியோ
உந்தன் நிழல் ஔியில்
மயங்கிதே முகம் கண்டு…!

விண்ணுலக தேவதையே
மண்ணுலகில் வந்து பிறந்தாய் என்னை வந்து சேர்வதற்கு…!

நன்றி
கவிஞர் மா.கணேஷ்
Exit mobile version