மிட்டாயாே மிட்டாய்! கவிஞர் மா.கணேஷ்

meittai tamildeepam


கிடைக்கவில்லை
தேடிப் பார்த்தும்
தேங்காய் மிட்டாய்…

இருந்தது அன்று
எங்கும்
எள்ளு மிட்டாய்…

சிந்தனைக்கு விருந்து அன்று
சீரண சக்தி கொண்ட
சீரக மிட்டாய்…

பிடித்ததும் அன்று
சிந்தியது தேன் துளி
தேன் மிட்டாய்…

தோற்கவில்லை அன்று
கரைத்து உண்ணும் முயற்சியில்
கல்கோனா மிட்டாய்…

காட்சிப் பொருளாய்
கடைகளில் இன்று
கடலை மிட்டாய்…

ஆனந்தமாய் அன்று
ஆசையோடு வாங்கியது
ஆரஞ்சு மிட்டாய்…

காற்றில் கரையாது அன்று
நாவில் கரைந்தது
சூடம் மிட்டாய்…

விளையாடியது அன்று
சவ்வாய் இழுத்து
சவ்வு மிட்டாய்…

பகிர்ந்து உண்டது அன்று
ஒற்றுமையாய்
ஒத்தக்காசு மிட்டாய்…

பார்க்கவில்லை இன்று
பாரினில் குழந்தைகள்
பம்பர மிட்டாய்…

அலங்கரித்தது இன்று
ஆடம்பரமாய் தட்டுக்களை
இன்னட்டுகளே(Chocolate)…

இல்பொருளாய் இன்று
இவ்வுலகில் அன்றைய
இனிப்பு மிட்டாய்…

நன்றி
கவிஞர் மா.கணேஷ்
Exit mobile version