ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ஏன் அணிகிறார்கள்🙏

hanuman tamildeepam

ராமனின் வெற்றிச் செய்தியை இலங்கையில் உள்ள அசோகவனத்தில் ராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதா தேவியிடம் முதன் முதலில்  சொன்னவர் ஆஞ்சநேயர். அந்த சந்தோஷ செய்தியை கூறிய ஆஞ்சநேயருக்குத்தான் ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என எண்ணினாள் சீதா.
பரிசு கொடுக்க அப்போது தன்னிடம் எதுவும் இல்லாததால் சுற்றும் முற்றும் பார்த்தாள். தன் அருகில் வெற்றிலைக் கொடி படர்ந்து இருந்தது. அதில் இருந்து. சில இலைகளை பறித்து அதை மாலையாக தொடுத்து அதைப் போட்டுக் கொள் என்று அனுமனிடம் கொடுத்தாள். இதன் காரணமாகத்தான் அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.


நன்றி….

Exit mobile version