மார்பக வீக்கத்தைக் குறைக்க உதவும் அற்புத கசாயம்

keerai soup

தேவையான பொருட்கள்

மார்பக வீக்கத்தால் அவதிப்படுவோர் இந்த கசாயத்தைப் பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

வேப்ப மரப் பட்டை   –  10 கிராம்

சுக்கு.              –   10 கிராம்

மிளகு.            –    10  கிராம்

கடுக்காய்த் தோல்.   –   10 கிராம்.

செய்முறை

முதலில் வேப்பமரப்பட்டை, சுக்கு, மிளகு மற்றும் கடுக்காய்த் தோல் ஆகியவற்றை எடுத்து சுத்தப் படுத்தி உடைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் உடைத்து வைத்துள்ள பொருட்களைப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்க வைத்து 50 மி.லி அளவாகச் சுண்ட வைத்து இறக்கி வைத்து வடிகட்டி குடிக்கவும்.

பயன்கள்

இந்தக் கசாயம் மார்பக வீக்கத்தைக் குறைக்க உதவும் அருமருந்தாகும். இந்தக் கசாயத்தைத்  தயார் செய்து வைத்துக் கொண்டு காலை , மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையும் தலா 15 மி.லி அளவுக்குச் சாப்பிடும் முன்பு குடித்து வந்தால் மார்பக வீக்கம் குறையும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

-கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்
Cell  :  96557 58609,  75503 24609
Covaibala15@gmail.com  

Exit mobile version