குவலய குடும்ப தினம்👨‍👨‍👦‍👦

family love relationship tamildeepam

தத்துவ கதைகள் பல சொல்லிடுவார்
தாத்தா எங்கள் தாத்தா..

பாட்டி வைத்தியம் செய்து காத்திடுவார்
பாட்டி எங்கள் பாட்டி..

தன்னலம் பாரது உழைத்திடுவார்
தந்தை எங்கள் தந்தை..

அன்பாய் அனைவரையும் வளர்த்திடுவார்
அம்மா எங்கள் அம்மா..

ஆசைகள் பல நிறைவேற்றிடுவார்
அண்ணன் எங்கள் அண்ணன்..

அன்னை போல் அன்பு கொண்டு மகிழ்ந்திடுவார்
அக்கா எங்கள் அக்கா…

தரணிக்கோர் தலைவி போல்
தங்கை எங்கள் தங்கை…

தன்னம்பிக்கையால் தலை சிறந்திடுவான்
தம்பி எங்கள் தம்பி..

குடும்பம் எங்கள் குடும்பம்
குவலயத்தின் நனிசிறந்த குடும்பம்…

நன்றி 
கவிஞர் மா.கணேஷ்
Exit mobile version