காதலுக்கு மரியாதை!

love soul kavithai tamildeepam

ஆம்பிளைக்கு அரும்பு மீசை அழகம்மா அதுக்கு ஒரு காவியமே இருக்கும்மா
ஓடுற பாம்ப ஒரு கையாலே பிடிச்சு 
வீரம் காட்டினால் போதுமா?
நல்ல மனசு பிள்ளைக்குணமும் வேண்டுமே – கூடவே
கள்ளம் கபடம் இல்லாத உள்ளமும் வேண்டுமே!

பொம்பளைக்கு அடக்கம் ஒடுக்கந்தான் அசத்தலான அழகும்மா
அத அழிச்சு முழிச்சு முழிச்சு சிரிச்சா பெட்டக் கோழிய விரட்டும்
கொண்டச் சேவல் போல
மொட்டு விடாத விடலப் பசங்ககூட ‘செட்ட’ப்புக்கு ஓடி வருவாங்க

காதலுக்கு மரியாதை
காலம் காலமா கட்டிக் காக்க வேணும் காதல் சின்னமென்று
அழகான கோட்டையொன்று
அசத்தலாக எழுப்ப வேணும்
சோதனைக்குப் பெயர் போன
மோதலுக்கு எப்போதும்
‘குட்பை’ சொல்ல வேணும்.

நன்றி
கவிஞர்
காரை வீரையா
Exit mobile version