காதல் பாடல்

love kadhal kavithai ganesh tamil deepam

உன் இதயத்தை திறந்து விடு
என் காதல் அதில் தெரியும்..

உன் இமைகளை மூடிவிடு
என் கனவுகள் அதில் வந்துவிடும்..

நிலவொளியான உன் முகவொளியில்
என் நிழல்களும் உன்னை தொடரும்..

என் இதயச் சிறகில் உன்னை சுமந்து
இமயம் வரை பறந்திடுவேன்…

யாரும் இல்லா தீவுதன்னில்
யாவும் பெற்று நாம் வாழ்ந்திடவே..

கூடு விட்டு கூடு பாய்ந்து
உன் இதயக் கூட்டில் புகுந்திடுவேன்…

உள்ளொளியான என் இதயஔி
உன் இதயச் சிறையில் ஔிந்திடுமே…

என் காதல் தாகம் தீர்ந்திடவே
உன் காதல் நீரை தந்துவிடு…

நான் காதலென கண்ட கனவுகளை
கானல் நீராய் மாற்றி விடாதே…

என் கனவுகளில் தினம் வந்தவளே
என் கண்களின் நீரை துடைத்துவிடு…

என் கண்களின் கருவிழியாய் மாறி
கனவுகளில் என்னுடன்
கலந்துவிடு…

நன்றி
கவிஞர் மா.கணேஷ்
Exit mobile version