💕 மூன்று முடிச்சு போடுவதன் காரணம் என்ன 💕 ? Moondru mudichu

1000033969

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான வாழ்க்கை பந்தத்தை இணைத்து வைப்பது மூன்று முடிச்சுதான். சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து வாழ்த்த, பெரியோர்கள் முன்னிலையில் மணமகன், மணமகளுக்கு தாலி கட்டும்போது மூன்று முடிச்சு எதற்கு போடச் சொல்கிறார்கள்.

💕 இந்த மூன்று முடிச்சு போடுவதற்கு பலவிதமான அர்த்தங்கள் உண்டு….

🤝 பிறக்கப்போகும் குழந்தை, ஆரோக்கியமாகவும், சிறந்த அறிவாளியாகவும் திகழ வேண்டும். என்பதற்காக படைக்கும் கடவுளான பிரம்மாவையும், கல்வி வரம் தரும் கடவுளான சரஸ்வதி தேவியையும் வணங்கி, முதல் முடிச்சு போடப்படுகிறது.

🤝 குடும்பத்தைக் காப்பதற்கும், தேவை இருக்கும் எளியவர்களுக்கு உதவி செய்வதற்கும் தேவையான செல்வச் செழிப்புடன் ஒரு வாழ்க்கை வேண்டும். இதற்காக காக்கும் கடவுளான திருமாலையும், செல்வங்களை அள்ளித் தரும் லட்சுமியையும் வணங்கி இரண்டாவது முடிச்சு போடப்படுகிறது.

🤝 இந்த உலகம் அமைதியாக இருப்பதற்கு, எங்கும் தர்மம் நிலவ வேண்டும். அநீதிகளை எதிர்க்கவும், அக்கிரமங்களை தட்டிக் கேட்கவும், இன்னல்களிலிருந்து தன் குடும்பத்தை பாதுகாக்கவும் ஒரு தனித்துவமான துணிச்சல் வேண்டும். இதற்காக சிவபெருமானையும், வீரத்திற்கு அடையாளமாக பார்வதி தேவியையும் வணங்கி மூன்றாவது முடிச்சு போடப்படுகிறது.

💕 மூன்று முடிச்சுகளுக்கு வேறு விதமாகவும் அர்த்தங்கள் சொல்கிறார்கள்.
🤝 இந்த திருமண பந்தத்தில் இணையும் மணமக்கள் இருவரும் மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் ஒன்றுபட்டு வாழ்நாள் முழுவதும் இணைந்திருக்க வேண்டும் என்பதற்காக இப்படி முடிச்சு போடுவதாக பெரியோர்கள் சொல்கிறார்கள்.

💕 ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி மூன்று முடிச்சுப் போடும் ஆண், அவளுக்கு மூன்று உறுதிகளை அளிக்கிறான்.
🤝 ” உன்னுடைய வாழ்வில் கடந்த காலத்தில் நிகழ்ந்த விஷயங்களுக்கும், நிகழ்காலத்தில் நடக்கும் எல்லாவித சம்பவங்களுக்கும், எதிர்காலத்தில் நிகழ இருக்கும் எல்லா விஷயங்களுக்கும் இந்த நிமிடத்திலிருந்து நானே பொறுப்பாவேன் ” என்று அவன் உறுதி அளிப்பதாக இந்த முடிச்சுக்கள் அர்த்தம் சொல்கின்றனவாம்.

💕 திருமண பந்தத்தில் இணைந்து புதுக் குடும்பத்தை உருவாக்கும் தம்பதிகள்.
🤝 தங்களுடைய பெற்றோர், வீட்டுக்கு வரும் விருந்தினர்கள், மறைந்த முன்னோர்களான பித்ருக்கள் ஆகிய மூவருக்கும் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தவறக் கூடாது என்பதை இந்த மூன்று முடிச்சுகளால் எல்லோருக்கும் உறுதி அளிக்கிறார்கள்.

💕 தன் மனைவியின் கழுத்தில் மூன்று முடிச்சு போடும் ஆண், அவளுக்கு மூன்று விஷயங்கள் அடங்கிய ஒரு பொறுப்பை அதன் மூலம் அளிக்கிறான்.
🤝 பிறந்த வீட்டுப் பெருமைகளையும், புகுந்த வீட்டுப் பெருமைகளையும் செவ்வனே காப்பாற்றி, எதிர்கால சந்ததியினருக்கு அவள் பரிசாகக் கொடுத்து, தங்கள் குடும்பப் பெருமையைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பு தான் அது.

💕 மூன்று முடிச்சு போடுவதற்கு இன்னொரு விளக்கமும் சொல்கின்றனர்.
🤝 ஒரு பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் முடிச்சு.
🤝 கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டாவது முடிச்சு.
🤝 நல்ல குழந்தை பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும் என்பதற்காக மூன்றாவது முடிச்சு.

💕 ஒரு பெண் மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்போது அவளுக்கு நெருக்கமான மூன்று பேருடைய சிந்தனைகளும் ஆலோசனைகளும் அவளுக்குத் தேவைப்படுகின்றன.

🤝 முதலாவது தாயின் ஆலோசனை. 🤝இரண்டாவது பார்ட்டி போன்ற உறவு  கொள்ள மிகுந்த அனுபவசாலி ஆக ஒரு பெண்மணியின் ஆலோசனை. 🤝மூன்றாவதாக அந்த பெண்ணுக்கு சம வயதுள்ள ஆனால் முன்பே திருமணம் ஆன இன்னொரு பெண்ணின் ஆலோசனை.

இவ்விதமாக ஒரு பெண், மூன்று பேரிடம் மிக முக்கியமான ஆலோசனைகளை பெற்று, மகிழ்ச்சியான மணவாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது இந்த மூன்று முடிச்சு நினைவூட்டுகிறது.


நன்றி…

Exit mobile version