வீட்டிற்கு அழகு சேர்க்கும் மணிபிளான்ட் செடி வைப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!

money plant tamildeepam

1️⃣ மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது.

2️⃣ மணி பிளான்ட்டை மண்ணிலும் வளர்க்கலாம், நீரிலும் வளர்க்கலாம். அதே போல, வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என அவரவர் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் வைத்து வளர்க்கலாம்.  ஓரிரு இலைகள் வாடினால் கூட விரைவாக அந்த இலைகளை அகற்றிவிட வேண்டும் இல்லையேல் இது பரவி மொத்த செடியையும் அழித்துவிடும்.

3️⃣ மணி பிளான்ட் வீட்டில் வளர்க்க விரும்புவோர் அதை சரியான திசையில் வளர்க்க வேண்டும். வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசை நோக்கி தான் வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

4️⃣ இது அதிக செல்வத்தைக் கொண்டுவருகிறதோ இல்லையோ… நல்ல காற்றுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இது ஒரு சக்திவாய்ந்த காற்று சுத்திகரிப்பு தாவரமாகும், இது உங்கள் வீட்டிலுள்ள காற்றை மிகவும் திறம்பட சுத்தம் செய்யும், அதிகளவில் வீட்டில் வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்று மணி பிளான்ட். நேரடி சூரிய வெளிச்சம் கிடைக்காத பகுதியிலும் வளரும் என்பதால் வீட்டினுள்ளும் வளர்ப்பதற்கு ஏற்றது.

5️⃣ இந்தச் செடி வளர்ப்பில் முக்கியமான விஷயம், இதன் இலைகள் நச்சுத்தன்மை கொண்டவை. எனவே, செல்லப்பிராணிகள் மற்றும் குழந்தைகளிடமிருந்து பாதுகாப்பாக வைக்கவேண்டும்.

நன்றி......
ஆதியா
Exit mobile version