நாவல்பழம் நிறமே! கவிஞர் மா.கணேஷ்

navalpalam tamil deepam

அடி நாவல் பழ நிறமே
தினம் உன்னை நினைக்குது என் மனமே..

அடி மல்லிகைப் பூ மணமே
தினம் என் மனசுக்குள் வீசுது உன் மணமே..

அடி கொய்யாப் பழ சுவையே
தினம் வந்து என் மனசை தான் கொல்லுரியே…

அடி ஆரஞ்சுப் பழ அழகே
தினம் உன் அழகை தான் ரசித்தேனே..

நீ எட்டாக்கனியாகவே இருக்கிறியே
தினம் உன்னை எட்டி பிடிக்கவே நினைக்கிறேனே..

என் மனதில் வந்து புள்ளிகளும் வைத்தியே
இப்ப வந்து கோலம் போட மறுக்கிறியே..

அன்பு என்றால் அள்ளிக்கொடு
இல்லை வம்பென்றால் சொல்லிவிடு…

உன்னை நினைத்து வந்தவனை வாழவிடு
இல்லையென்றால் வான்வெளிக்கு என் உயிரை அனுப்பிவிடு…

நன்றி
கவிஞர் மா.கணேஷ்
Exit mobile version