கீழடி உலகின் தாய்மடி கவிஞர் இரா. இரவி Poet Ira.ravi

tamil deepam 1

கீழடி உலகின் தாய்மடி கவிஞர் இரா. இரவி Poet Ira.ravi

கீழடி உலகின் தாய்மடி என்பது உண்மை
கீழடி உரைக்கின்றது தமிழரின் அன்றைய தொன்மை

எழுத்தறிவோடு குடிமக்களும் வாழ்ந்திட்ட கீழடி
எல்லா வகை நாகரிகத்தோடும் வாழ்ந்திட்ட கீழடி

முத்து பவளம் அணிகலன்கள் கிடைத்திட்ட கீழடி
முத்தாய்ப்பான தொழில்களும் புரிந்திட்ட கீழடி

விண்முட்டும் புகழை பெற்றுத்தந்திட்ட கீழடி
விளையாட்டு சாதனங்கள் பல தந்திட்ட கீழடி

தந்தத்தால் ஆன சீப்புகள் கிடைத்திட்ட கீழடி
தங்கத்தால் ஆன சங்கிலிகள் கிடைத்திட்ட கீழடி

நெசவுக்கான பொருட்கள் சில கிடைத்திட்ட கீழடி
நெசவு செய்து சிறப்பாக வாழ்ந்திட்ட கீழடி

கண்கவரும் வண்ணப்பொருட்கள் தந்திட்ட கீழடி
கழிவறைகள் கட்டி வாழ்ந்திட்ட கீழடி

நீர் மேலாண்மை அறிவில் உயர்ந்திட்ட கீழடி
நீர் எடுக்க கிணற்றுத்தொட்டிகள் செய்திட்ட கீழடி

தோண்டத் தோண்ட தந்து கொண்டே இருந்த கீழடி
தோண்டுவதற்கே போராடிப் பெற்ற கீழடி

சுட்ட சட்டிகள் செய்து வாழ்ந்திட்ட கீழடி
சுடும் தொழில்நுட்பம் அறிந்து வாழ்ந்திட்ட கீழடி

வெள்ளை வண்ணத்தால் அழகுபடுத்திட்ட கீழடி
வாழ்வாங்கு வாழ்ந்திட்ட வளம் மிக்க கீழடி

உலகமே அன்னார்ந்து வியந்திட்ட கீழடி
உலகின் மூத்தகுடி தமிழ்க்குடி வாழ்ந்திட்ட கீழடி

Exit mobile version