“லீவ் மட்டும் விடுங்க மேடம், உங்களுக்கு…” – ஆட்சியரிடம் இன்ஸ்டாவில் கெஞ்சிய புதுக்கோட்டை மாணவர்கள் | Pudhukottai District Collector Kavitha Ramu shared students leave appeals in her insta page

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையைத் தொடர்ந்து, திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க கோரி, மாணவர்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் வைத்த கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிறன்று பெய்த மழையைத் தொடர்ந்து, அடுத்தநாள் திங்கள்கிழமைக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கக் கோரி அம்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலரும், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவுக்கு, அவரது இன்ஸ்டாகிராமில் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்ஸ்டாவில் வந்த மாணவர்களின் விடுமுறை கோரிக்கைகளை ஆட்சியர் கவிதா ராமு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுகளை பலரும் பகிர்ந்துவருகின்றனர். ஆட்சியர் கவிதா ராமுவின் இன்ஸ்டா பக்கத்தில் விடுமுறை கோரிய மாணவர்களின் அன்பு கெஞ்சல்களில் சில…

16655592773061

“மேடம் மார்க் வாங்கலன்னா எல்லாரும் கேட்பாங்க மேடம், லீவ் மேடம், உங்களையே நம்பி இருக்கேன் மேடம், உதவி செய்யுங்கள்… எனக்கு மட்டும் இல்லை மேடம், எல்லோருக்கு ஒருநாள் லீவ் மேடம்.”

“நாளைக்கு லீவ் விடுங்க கலெக்டர் அம்மா”

“நாளைக்கு மட்டும் லீவ் இல்லைன்னா பைத்தியம் ஆயிருவேன் போல,

லீவ் மட்டும் விடுங்க மேடம் உங்களுக்கு கோயில் கட்டுறேன் என் மனசுல

படிச்சு படிச்சு பைத்தியம் புடிக்கிற மாதிரி இருக்கு மேடம்”

“செல்லம் நாளைக்கு லீவ்”

“ஹெவி ரெயின் மேடம்… கொஞ்சம் லீவ் விடுங்க, பளீஸ்”

“நாளைக்கு ஸ்கூலுக்கு லீவ் விடுங்க, நீங்க எடுக்கிற முடிவில்தான் பல பேரோட சந்தோஷம் இருக்கு. நாங்கள் ஒண்ணும் தினமும் லீவ் கேட்கவில்லை. எப்போதோ ஒருநாள்தானே கேட்கிறோம். அந்த ஒருநாளாக நாளையை பரிசீலித்து விடுங்க தெய்வமே”…

“லீவ் விடுங்க மேடம்… புதுக்கோட்டை மாவட்டத்துக்கு, ரொம்ப ஸ்டரஸ்புஃல்லா இருக்கு மேடம்”…

நன்றி!

Exit mobile version