ரஜினியின் அரசியல் வருகை: இந்திய அளவில் ட்ரெண்டாகும் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல | rajini party announcement trending

607789

ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பால், ட்விட்டர் தளத்தில் #இப்போ இல்லேன்னா எப்பவும்_இல்ல என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

நீண்ட நாட்களாக ரஜினியின் அரசியல் வருகை குறித்துப் பல்வேறு செய்திகள், தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. சில தினங்களுக்கு முன்பு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் ரஜினி. அன்றைய தினத்தில் கூட, ரஜினி தனது உடல்நிலை குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்ததாகக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் ரஜினி தரப்பில் அறிக்கை வெளியாகும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 3) காலை முதலே ரஜினி அறிக்கை இன்று வெளியாக வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியானது.

சில மணித்துளிகளுக்கு முன்பு ரஜினி தனது ட்விட்டர் பதிவில் “ஜனவரியில் கட்சி தொடக்கம், டிசம்பர் 31-ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம். #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல” என்று ட்வீட் செய்தார்.

அதோடு சிறு கடிதமொன்றையும் வெளியிட்டார்.

ரஜினி வெளியிட்ட ட்வீட்டில் உள்ள ஹேஷ்டேகுகள், சில மணித்துளிகளில் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. மேலும், பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் தொடர்ச்சியாக ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்து வருகிறார்கள்.

நன்றி!

Exit mobile version