ஏப்ரல் 30 இரவு 12:15 மணிக்கு அதாவது, நாளை தொடங்கி மே 1 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 04:07 வரை நீடிக்கும் சூரிய கிரகணம் 

F23F4340 6A30 4802 8FF8 AB669FEA313C

பஞ்சாக்கின் படி, 2022 ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 இரவு 12:15 மணிக்கு அதாவது, நாளை தொடங்கி மே 1 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 04:07 வரை நீடிக்கும். 

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் நிகழ்வு சூரிய கிரகணம்  என்றழைப்படுகிறது.  

இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. ஆனால் , தென் அமெரிக்கா, பசிபிக் அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகா போன்ற நாடுகளில் இந்த கிரகணத்தை பார்க்க முடியும். 

இந்து நாட்காட்டியின் படி, இந்த ஆண்டும் முதல் சூரிய கிரகணம் சனி அமாவாசை அன்று நடைபெறுகிறது. இதயம் பலவீனமாக இருப்பவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்லாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கின்றனர் ஜோதிடர்கள். 

ஏனெனில், அப்படி வெளியே வரும் போது, கர்ப்பிணிகள் மீது வெளிச்சம்பட்டால், சில கதிர் வீச்சுகள் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்க அதிக வாய்ப்பு இருக்கிறதாம். மேலும், அதன் காரணமாக பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சில மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதாம்.

Exit mobile version