🙏🏻கணேச சதுர்த்தி🙏🏻 கவிஞர் மா.கணேஷ்

ganesha tamil deepam

அன்னை பார்வதியின் பிள்ளை எங்கள் கணேசா..!
ஆறுமுகன் சகோதரனே எங்கள் கணேசா..!
இன்னல்களை நீக்கிடுவார் எங்கள் கணேசா..!
ஈசனின் மைந்தன் எங்கள் கணேசா..!
உன்னை இங்கே வணங்கிடவே கணேசா..!
ஊரெல்லாம் ஒன்றாய் கூடிடுவோம் கணேசா..!
எங்கள் குறை தீர்க்க கணேசா…!
ஏன் இன்னும் தயக்கம் கணேசா..!
ஐந்துகரத்தனே கணேசா..!
ஒற்றுமையாய் இனி நாங்கள் இருப்போம் கணேசா..!
ஓடிவந்து காத்தல் அருள்வாய் கணேசா..!
ஔவைக்கு அருள் செய்த கணேசா..!
அஃது போல் எங்களுக்கும் அருள் செய்ய வேண்டும் கணேசா…!

அனைவருக்கும் இனிய கணேச சதுர்த்தி வாழ்த்துக்கள்🙏🏻

நன்றி
கவிஞர் மா.கணேஷ்
Exit mobile version