சோளக்காட்டு பொம்மை..

tamil deepam kavithai

அணிந்தது
பழைய ஆடை
சோளக்காட்டு பொம்மை…

வியர்க்க வில்லை
வெயிலிலும்
சோளக்காட்டு பொம்மை…

உன் மண்டையென்ன மண்ணா
ஆமாம் பானை
சோளக்காட்டு பொம்மை…

வயல் வரப்பில்
வாஞ்சையுடன்
சோளக்காட்டு பொம்மை…

பயந்தது
பறவைகள்
சோளக்காட்டு பொம்மை…

மெய்யில்லா
மெய்
சோளக்காட்டு பொம்மை…

இரண்டு கால் இருந்தும்
ஒற்றைக் காலில்
சோளக்காட்டு பொம்மை…

உயிரில்லா
உருவம்
சோளக்காட்டு பொம்மை…

கெட்டிக்காரன்
காவலுக்கு
சோளக்காட்டு பொம்மை…

வீரன்
விளைநிளத்தின்
சோளக்காட்டு பொம்மை…

உதிரம்மில்லா
உருவம்
சோளக்காட்டு பொம்மை…

கோபம்மில்லா
கோமாளி
சோளக்காட்டு பொம்மை…

அவமானம்மில்லை
கிழிந்த ஆடை
சோளக்காட்டு பொம்மை…

தொள தொள சட்டை
தொய்வில்லா உடல்
சோளக்காட்டு பொம்மை…

விழித்திருக்கும்
உறக்கம்மின்றி
சோளக்காட்டு பொம்மை…

காவல் உணவின்றி
உணவுக்காக
சோளக்காட்டு பொம்மை..

உழவுகாக்க
நீட்டிய கரம்
சோளக்காட்டு பொம்மை…

காணவில்லை
விளைநிலம் விலைநிலமானதும்
சோளக்காட்டு பொம்மை…

நன்றி
கவிஞர் மா.கணேஷ்
Exit mobile version