உறவுகளின் சிகரம் தாய் – கவிஞர் இரா.இரவி

Tamil deepam Ravi amma

உயிரினங்களின் முதல் மொழியே
ஒப்பற்ற அம்மா நீயே
உலகிற்கு அறிமுகம் செய்தாய்
உலகம் போற்றும் உறவு தாய்
உறவுகள் ஆயிரம் உண்டு
உயர்ந்த அன்னைக்கு இணை ஏது?
பத்துத்திங்கள் என்னுயிர் வளர்த்தாய்
எட்டி உதைத்தாலும் சிரித்தாய்
எண்ணி எண்ணிப் பூரித்தாய்
பால் நிலவைப் பார்த்திட வைத்தாய்
பால் சோறோடு பண்பையும் ஊட்டிய தாய்
தாலாட்டித் தூங்கிட வைத்தாய்
தன் தூக்கத்தை மறந்தாய்
நோயுற்ற போது துடித்தாய்
நோய் நீங்கிட மருந்தளித்தாய்
தாய்மொழியோடு தன்மானமும் பயிற்றுவித்தாய்
தன்னிகரில்லாப் பாசமும் பொழிந்தாய்
பசியோடு பசியாற வைத்தாய்
புசிப்பதை ரசித்துப்பசியாறிய தாய்
தியாகத்தின் திரு உருவம் தாய்
தரணியில் பேசும் தெய்வம் தாய்.

நன்றி 
கவிஞர் இரா.இரவி 
Exit mobile version