எது ? காதல் ! கவிஞர் இரா .இரவி

love tamil deepam

காதலர் தினம் மட்டும் நினைப்பதல்ல காதல்
காதலர் உயிர் உள்ளவரை நினைப்பதே காதல்

ஒற்றை ரோசாவில் முடிவதல்ல காதல்
பிறவி முழுவதும் தொடர்வதே காதல்

பரிசுப் பொருட்கள் பகிர்ந்து கொள்ளுவதல்ல காதல்
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதே காதல்

கடற்கரையில் பேசுவது மட்டுமல்ல காதல்
காலம் முழுவதும் இணைந்து இருப்பதே காதல்

காதலர்கள் கூடிக் களைவது அல்ல காதல்
களையாமல் நிலைத்து இருப்பதுவே காதல்

உடல் தீண்டல் மட்டுமல்ல காதல்
உள்ளத் தீண்டலே உண்மைக் காதல்

புத்தாடை வழங்குவது அல்ல காதல்
புரிந்து புத்துணர்வு வழங்குவதே காதல்

உயிரை விடுவது அல்ல காதல்
உயிர் உள்ளவரை போராடுவதே காதல்

இன்பத்தை மட்டுமே எதிர்பார்ப்பதல்ல காதல்
துன்பத்தையும் ஏற்றுக் கொள்வதே காதல்

லாப நட்டக் கணக்கு பார்ப்பதல்ல காதல்
கஷ்டம் நஷ்டம் பாராததே காதல்

காமத்தால் வருவது அல்ல காதல்
காலத்தால் என்றும் அழியாததே காதல்

நன்றி 
கவிஞர் இரா.இரவி 
Exit mobile version