என்னவளே கவிஞனுக்கு கற்பனையே அழகு கவிஞர் இரா .இரவி

ennavaile tamil deepam

என்னவளே கவிஞனுக்கு கற்பனையே அழகு

உனக்காக எழுதிய கவிதைகளை
நூலாக்கினேன் .
கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம்
கொடுத்து மகிழ்கின்றேன் .
படித்த பலரும் பாராட்டினார்கள் .
தொலைக்காட்சிகளிலும்
வலம் வந்தது என் கவிதைகள்
விமர்சனம் செய்தார்கள்
பாராட்ட வேண்டிய நீயோ
அருகில் இல்லை
படிக்க வேண்டிய நீயோ
கண்ணுக்கு எட்டாத தூரத்தில்
கடைகளிலும் என் நூல்கள்
கிடைக்கும்
கண்ணில் பட்டால்
வாங்கிப் படிப்பாய்
நம்பிக்கை உண்டு
படித்துவிட்டுக்
கருத்துச் சொல்லமாட்டாய்
நிருபர்களின் சிக்கலான
கேள்விக்கு பதில் சொல்லாத
அரசியல்வாதிபோல
இருந்துவிடுவாய்
உன் மனம் நான் அறிவேன்
சொல்லாவிட்டாலும்
சொன்னதாக நினைத்துக் கொள்வேன்
கவிஞனுக்குக் கற்பனையே அழகு

நன்றி 
கவிஞர் இரா.இரவி 
Exit mobile version