குறும்பா.எய்ட்ஸ் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

hiv tamil deepam

குறும்பா.எய்ட்ஸ் ஹைக்கூ

பண்பாடுப் பயிற்றுவிக்கும்
பயமுறுத்தல் நோய்
எய்ட்ஸ்

ஒழுக்கத்தைப் பொதுவாக்குவோம்
இருபாலருக்கும்
வராது எய்ட்ஸ்

மருந்து இல்லை
மரணம் உறுதி
எய்ட்ஸ்

உயிரை உருக்கும்
உடலைக் கெடுக்கும்
எய்ட்ஸ்

கவனம் தேவை
குருதி பெறுகையில்
எய்ட்ஸ்

எச்சரிக்கை
ஊசி போடுகையில்
எய்ட்ஸ்

வரும் முன் காப்போம்
உயிர்க் கொல்லிநோய்
உணர்ந்திடுவோம்

சபலத்தின் சம்பளம்
சலனத்தின் தண்டனை
எய்ட்ஸ்

சில நிமிட மகிழ்வால்
பல வருடங்கள் இழப்பு
எய்ட்ஸ்

வெறுக்க வேண்டாம்
நேசிப்போம் நண்பராக
எய்ட்ஸ் நோயாளிகளை

நன்றி 
கவிஞர் இரா.இரவி 
Exit mobile version