கோபுரம் ! கவிஞர் இரா .இரவி !

kovil tamil deepam

கோபுரம் !

காற்றின் தயவால்
காகிதம் சென்றது
கோபுரம் !

மாடப்புறாக்களின்
இலவச தங்குமிடம்
கோபுரம் !

குனிந்த தலை நிமிராத பெண்ணையும்
நிமிர வைக்கும்
கோபுரம் !

வாழ்கின்றது
கலசங்களால்
கோபுரம் !

வானைத் தொடும்
ஆனால் தொடாது
கோபுரம் !

கர்வம் கொள்வதில்லை
உயரமாக இருந்தாலும்
கோபுரம் !

நன்றி
கவிஞர் இரா.இரவி
Exit mobile version