குறும்பா ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

vilakku tamil deepam

குறும்பா ஹைக்கூ

நானே பெரியவன்
நினைக்கும்போதே
மிகச் சிறியவனாவாய்

சிந்திச் சென்றது
குப்பையோடு மணத்தையும்
குப்பைவண்டி

காசாக்கலாம்
குப்பையையும்
பெயர் எடுத்துவிட்டால்

மணத்தோடு அவள் மனமும்
பரப்பியது
மலர்ந்த மலர்

ஒளிப் பாய்ச்சியது
ஓடியது இருள்
விளக்கு

நீண்ட பிரிவிக்குபின்
சந்திப்பு
கூடுதல் இன்பம்

வெட்கப் பட வேண்டும்
வல்லரசுகள்
சோமாலியா சோகம்

நன்றி 
கவிஞர் இரா.இரவி 
Exit mobile version