மதுரை மாநகரம்! கவிஞர்.இரா.இரவி

madurai tamil deepam

மதுரை மாநகரம்!

உலகப்பொது மறையாம் ஒப்பற்ற திருக்குறள்
உலகிற்கு அளித்த பெருமை பெற்ற மதுரை
செம்மொழி தமிழ்மொழி அழியாமல் இருக்க
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை

சதுரம் சதுரமாக வடிவமைத்த வடிவான நகரம்
சிறப்புகள் பல தன்னகத்தே கொண்ட மதுரை
மல்லிகை மலரை மலையென தினமும் இன்றும்
மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திடும் மதுரை

தாயுக்கு அடுத்தபடியாக மதுரை மக்கள் மதிப்பது
தாய்மண்ணான அழகிய நகரம் மதுரை
‘சிலப்பதிகாரம் முதல் கணிப்பொறி’ காலம் வரை
சிங்கார மதுரைக்கு ‘தூங்காநகரம் ‘ என்று பெயர்

சூடான இட்லியும் சுவையான சட்னிகளும்
சூரியன் உறங்கும் நேரத்திலும் கிடைக்கும்
உலகில் மதுரைக்கு இணை எதுவுமில்லை
உலகம் உள்ளவரை மதுரைக்கு அழிவில்லை

நன்றி 
கவிஞர் இரா.இரவி 
Exit mobile version