பறவையின் மனசு ! கவிஞர் இரா. இரவி.

birds tamil deepam

சிறகுகளை விரித்து வானம் பறக்கும்
சிட்டுக்குருவி தொடங்கி கழுகுகளும் பறக்கும் !

பறவைகளை அஃறிணை என்கிறோம் நாம்
பறக்க முடியுமா? மனிதனால் ஒரு நிமிடம்!

மனிதனுக்கு பறக்கும் ஆற்றல் இல்லை
மாண்புமிக்க பறவைகளுக்கு பறக்க முடியும் !

மனிதனை விட உயர்திணை தான் பறவை
மனிதன் மட்டம் தாம் பறவைக்கு முன்னே!

பறவை கூடு கட்டி குதூகலமாக வாழும்
பாரம் மனபாரம் பறவைகளுக்கு இல்லை!

பறவைகள் பழங்கள் உண்டு பின் துப்பிய விதைகளே
பாரினில் காடுகள் வளர காரணமானது!

பறவைகள் மட்டும் இல்லை என்றால்
பரந்து விரிந்த காடுகளுக்குச் சாத்தியமில்லை !

புழு பூச்சிகளை உண்டு சுத்தம் செய்வதும் பறவைகளே
பூமிக்கு அழகு சேர்ப்பதும் அற்புதப் பறவைகளே!

மனிதனைப் போல பதுக்குவது இல்லை பறவைகள்
மனசு நல்ல மனசு உழைத்து உண்ணும் பறவைகள் !

விமானம் கண்டுபிடிக்க காரணம் பறவைகள்
விமானத்தையும் விஞ்சிப் பறக்கும் பறவைகள் !

குழந்தைகள் பார்த்தால் குதூகலம் கொள்வார்கள்
கொள்ளையடிக்கும் உள்ளங்களை பறக்கும் பறவைகள் !

அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்று
ஆசைப்பட்டார் அந்தக் கால கவிஞர்!

பாலில் உள்ள தண்ணீரை நீக்கி விட்டு
பாலை மட்டும் அருந்துமாலம் அக்காலத்து அன்னப்பறவை !

மனிதர்களும் அல்லவை நீக்கி நல்லவை ஏற்று
மண்ணில் நல்ல வண்ணம் வாழ வேண்டும் !

தேசப்பிதா அடுத்த பிறவி என்று இருந்தால்
தமிழனாகப் பிறக்க விரும்பினர் திருக்குறள் படிக்க !

முதுமுனைவர் இறையன்பு அடுத்த பிறவி இருந்தால்
மண்ணில் பறவையாகப் பிறக்க விரும்பி உள்ளார் !

பறவையின் மனசு பண்பட்ட மனசு
பாரினில் பறவை மனசை மனிதர்களும் பெறுவோம்!

நன்றி 
கவிஞர் இரா.இரவி 
Exit mobile version