எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது    கவிஞர் இரா.இரவி

33FAEDCF AB29 4433 B2FC 23C41DE279FF

எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது
பெண்களுக்கு விடுதலை ஆண்களால் கிடைக்காது
மண் புழுவாய்ப் நெளிந்தது போதும்
பெண் புலியாய்ப் புறப்படு நாளும்
புழுவைக்கூட சீண்டினால் சீற்றம் வரும்
பெண்ணே! உனக்கு சீற்றம் எப்போது வரும்
கொட்டக் கொட்ட குனிந்தது போதும்
புராணப்புளுகை நம்பியது போதும்
புதுமைக்கருத்தை ஏற்றிட வேண்டும்
ஆண்கள் என்பதால் ஆணவம் கொள்வதும் ஏன்?
பெண்கள் என்பதால் அடிமைப்படுத்துவதும் ஏன்?
அடிமை விலங்கைத் தகர்த்திடல் வேண்டும்
அற்புதச்சிறகை விரித்திடல் வேண்டும்
ஆணுக்குள்ள சுதந்திரம் பெண்ணுக்கும் வேண்டும்
அர்த்தமற்ற சுதந்திரம் யாருக்கு வேண்டும்
புதியதோர் உலகம் செய்திடல் வேண்டும்
புதுமைப் பெண்கள் அதனை ஆள வேண்டும்

நன்றி
கவிஞர் இரா.இரவி
Exit mobile version