பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !  கவிஞர் இரா .இரவி

tamildeepam tamil

என்ன ? வளம் இல்லை நம் தமிழ்  மொழியில்
ஏன்? கையை    ஏந்த வேண்டும் பிற மொழியில்

அழகுத்  தமிழ்ச்  சொற்கள் ஆயிரம் இருக்கையில்
அந்நிய மொழிச் சொற்கள் கலப்பது மடமை

உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு
மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு

வாழ வந்தவர்கள் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்
வாழ வந்தவர்கள் எம்மை ஆள நினைப்பது தவறு

தமிழ் என்ற அமுதத்தில் திட்டமிட்டே வட மொழி
நஞ்சுக் கலக்கும் வஞ்சகர்கள் திருந்தட்டும்

முதலில் தோன்றிய மூத்தமொழி நம் தமிழ் மொழி
இளையமொழிகள் தமிழை அழிக்க நினைப்பதா ?

ஈடில்லா இலக்கிய இலக்கணங்கள் நிறைந்த மொழி
எண்ணிலடங்கா சொற்களைக்  கொண்ட தமிழ் மொழி

திரு என்ற சொல்லை ஸ்ரீ என்று எழுதாதீர்கள்
தீந்தமிழில் வட மொழி  நஞ்சுக் கலக்காதீர்கள்

தமிழைத் தமிழாக எழுதுவோம் பேசுவோம்
தமிழின்றி பிற மொழிச் சொற்களைத் தவிர்ப்போம்

பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !
பைந்தமிழின் பெருமையை தரணிக்குப் பறைசாற்றுவோம் !

நன்றி
கவிஞர் இரா.இரவி
Exit mobile version