தேமல் சரியாக பாட்டி வைத்தியம் !

themal solution paatti vitiyam tamil deepam

1️⃣ எந்த வகையான திருமலை ஆனாலும் தொட்டாற் சுருங்கி இலையைக் கொண்டு வந்து நைத்துச் சாறு எடுத்து அந்தச் சாற்றைத் தேமலுன் மேல் பூசி வந்தால் தேமல் மறைந்து விடும்.

2️⃣ வேப்பம் பட்டைச் சாற்றைக் காலை வேளையில் நன்றாகத் தடவி வைத்திருந்து மாலையில் கழுவிவிட ஐந்தே நாட்களில் தேமல் மறைந்து விடும்.

3️⃣ ஜாதிக்காயை, நாயுருவி இலைச் சாறு விட்டு மை போல அரைத்துத் தேமலின் மேல் காலை, மாலை பூசி வந்தால் தேமல் மறைந்து விடும்.

4️⃣ புடலங்காயில் தேவையான அளவு எடுத்து அத்துடன் சிறிதளவு குப்பை மேனிச் சாறு விட்டு மைபோல அரைத்துத் தேமலின் மேல் தடவி வந்தால் தேமல் மறைந்து விடும்.

5️⃣ நிலவாகையில் வேருடன் எலுமிச்சம் பழச்சாறு விட்டு மை போல அரைத்து இரவு படுக்கும் முன் தேமலின் மேல் கனமாகப் பூசி காலையில் கழுவிவிட ஐந்தே நாளில் தேமல் மறையும்.

நன்றி.... 
Exit mobile version