தமிழுக்கு செம்மொழி பெற்றுத் தந்த திருக்குறள்.கவிஞர் இரா.இரவி.

thiruikkurail tamil beepam

தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள்
தனிப் பெரும் இடம் பெற்ற இலக்கியம் திருக்குறள்
தமிழ் என்ற சொல்லே இடம்பெறாத திருக்குறள்
தமிழன் என்ற சொல்லே இடம்பெறாத திருக்குறள்
கடவுள் என்ற சொல்லே இடம்பெறாத திருக்குறள்
கற்க்கண்டை மிஞ்சும் கனிச்சுவைமிக்க திருக்குறள்
வாழ்வியல் நெறியை பயிற்றுவிக்கும் திருக்குறள்
வாழ்வின் அர்த்தம் உணர்த்தும் திருக்குறள்
உலக இலக்கியங்களின் உன்னதம் திருக்குறள்
உலகிற்கு அறநெறி அறிவிக்கும் திருக்குறள்
உலக மொழிகள் யாவிலும் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்
உலக மக்கள் யாவரும் அறிந்த திருக்குறள்
அழியாப் பெருமையுடன் நிலைத்திருக்கும் திருக்குறள்
அறியாமை நீக்கிடும் அறிவுடைமை திருக்குறள்
மனிதநேயம் மனதில் விதைக்கும் திருக்குறள்
மடமை நீக்கி பகுத்தறிவைப் போதிக்கும் திருக்குறள்
ஈடு இணையற்ற இனிய இலக்கியம் திருக்குறள்
எண்ணிலடங்கா கருத்துப் புதையல் திருக்குறள்
சொக்க வைக்கும் சொற்களின் சுரங்கம் திருக்குறள்
சோகத்தை மறக்க வைக்கும் சுகம் திருக்குறள்
தமிழுக்கு செம்மொழி பெற்றுத் தந்த திருக்குறள்
தமிழருக்கு பெருமை ஈட்டித் தந்த திருக்குறள்
காந்தியடிகளின் குரு டால்ஸ்டாய்
டால்ஸ்டாயின் குரு திருவள்ளுவர்

நன்றி
கவிஞர் இரா.இரவி
Exit mobile version