தனித்தன்மையுடன் இரு.. கவிஞர் மா.கணேஷ்

thainthuvam tamil deepam

தனித்தன்மையுடன் இரு..
தன்னம்பிக்கையுடன் இரு..

அகிலத்தில்
அற்புதமானவராக வாழ
தனித்தன்மையுடன் இரு..
தன்னம்பிக்கையுடன் இரு..

எல்லோருக்கும்
எடுத்துக்காட்டாக வாழ
தனித்தன்மையுடன் இரு..
தன்னம்பிக்கையுடன் இரு..

பாடம்மாக
உலகம் உன்னைப் படிக்க
தனித்தன்மையுடன் இரு..
தன்னம்பிக்கையுடன் இரு..

ஆசைப்படுவார் பலர்
உன்னைப் போல் வாழ
தனித்தன்மையுடன் இரு..
தன்னம்பிக்கையுடன் இரு..

பழகவருவார் பலர்
பாரினில் உன்னிடம்
தனித்தன்மையுடன் இரு..
தன்னம்பிக்கையுடன் இரு..

முயற்சிப்பார் பலர்
முன்மாதிரியாய் உன்னை கண்டு
தனித்தன்மையுடன் இரு..
தன்னம்பிக்கையுடன் இரு..

நாடிவருவார் பலர்
நண்பனாய் உன்னை ஏற்க
தனித்தன்மையுடன் இரு..
தன்னம்பிக்கையுடன் இரு..

வாசிப்பார் பலர்
வாஞ்சையுடன் உன்னை கண்டு
தனித்தன்மையுடன் இரு..
தன்னம்பிக்கையுடன் இரு..

தரணிக்கோர்
தலைசிறந்தவராய் வாழ
தனித்தன்மையுடன் இரு..
தன்னம்பிக்கையுடன் இரு..

வசப்படும் ஒருநாள்
வானமும் இவ்வையகமும்
தனித்தன்மையுடன் இரு..
தன்னம்பிக்கையுடன் இரு..

நன்றி
கவிஞர் மா.கணேஷ்
Exit mobile version