உழைப்பே உலகின் வளர்ச்சி..!

ulaippu work tamildeepam

விவசாயின் உழைப்பு
விவசாயத்தின் வளர்ச்சி..!

விஞ்ஞானியின் உழைப்பு
விஞ்ஞானத்தின் வளர்ச்சி..!

மெஞ்ஞானியின் உழைப்பு
மெஞ்ஞானத்தின் வளர்ச்சி..!

பொறியாளரின் உழைப்பு
கட்டிட கலையின் வளர்ச்சி..!

ஆசிரியரின் உழைப்பு
மாணவர்களின் வளர்ச்சி..!

கவிஞரின் உழைப்பு
கவிதையின் வளர்ச்சி..!

படைப்பாளிகளின் உழைப்பு
படைப்புகளின் வளர்ச்சி..!

ஓவியரின் உழைப்பு
ஓவியத்தின் வளர்ச்சி..!

சிற்பியின் உழைப்பு
சிற்பகலையின் வளர்ச்சி..!

அறிஞர்களின் உழைப்பு
அறிவியலின் வளர்ச்சி..!

மருத்துவரின் உழைப்பு
உயிரின் வளர்ச்சி..!

காவலரின் உழைப்பு
பாதுகாப்பின் வளர்ச்சி..!

தூய்மை பணியாளரின் உழைப்பு
சுகாதாரத்தின் வளர்ச்சி..!

நன்மக்களின் உழைப்பு
நாட்டின் வளர்ச்சி..!

அனைவரின் உன்னத உழைப்பே
உலகின் வளர்ச்சி..!

நன்றி…
மா கணேஷ்
Exit mobile version