காய்கள்.. கவிஞர் மா.கணேஷ்

vegetables tamildeepam

வெட்டவில்லை
துணிகளை
கத்திரிக்காய்…

ஊறுகாய்க்கு
உகந்தது
மாங்காய்…

இனியது
இனிப்பு நோய்க்கு
பாகற்காய்…

வந்துவிடும்
வாயுவது
வாழைக்காய்…

அளவில்லா
ஆற்றலுக்கு
அத்திக்காய்…

ஏற்றதல்ல
உணவுக்கு
எட்டிக்காய்…

பருத்துருக்கும்
பாரினில்
பரங்கிகாய்…

பூசைக்கு
ஏற்றது
பூசணிக்காய்…

பாவையின்
விரலது
வெண்டைக்காய்…

தந்துவிடும் உடலுக்கு
எதிர்ப்பு சக்தியது
நெல்லிக்காய்…

தேவையது
அர்ச்சனைக்கு
தேங்காய்…

இனிக்கவில்லை
சீனியாய்
சீனிவரங்காய்…

நீளமது
புவியில்
புடலங்காய்…

தந்துவிடும்
காரத்தையது
மிளகாய்…

வந்துவிடும்
நீர்ச்சத்து
சொரைக்காய்…

போக்கிவிடும்
பிணிகளை
பீர்க்கங்காய்…

நன்றி
கவிஞர் மா.கணேஷ்
Exit mobile version