பெண்ணே அழாதே பெண்ணே! கவிஞர் இரா.இரவி…

kavithai tamil deepam

அழப் பிறந்தவள் அல்ல நீ
ஆளப் பிறந்தவள் நீ
பெண்ணாகப் பிறந்ததற்கு
கவலை கொள்ளாதே நீ
கர்வம் கொள் நீ
பெருமை கொள் நீ
அடிமை விலங்கை
அடித்து நொறுக்கு
அற்புதச் சிறகை
விரித்துப் பற.
கொட்டக்கொட்ட
குனிந்து போதும்
கொட்டும் கரம்
முறித்திடு நீ
இனி வெங்காயம்
நறுக்கும் போது கூட
அழவேண்டாம் .
இனி வெங்காயம்கூட
நறுக்க வேண்டாம் .
விழிகளில் கண்ணீர் நிறுத்து
இதழ்களில் புன்னகை ஏந்து.

நன்றி
கவிஞர் இரா.இரவி
Exit mobile version