அன்பு பெருகட்டும் மோதல் குறையட்டும் !! காரை வீரையா !!!

45.00

19 in stock

Description

அன்பிற்கினியவர்க்கு என்ன நோக்கம்!

அன்பு பெருகட்டும் மோதல் குறையட்டும் !! – இந்நூல் கவிதை நூல் .கவிதையினை பாடல்களாக வடித்து ஒவ்வொரு இதயங்களையும் சுண்டி இழுக்கும் வகையினில் இந்நூல் படைத்துள்ளேன். நிகழ்வு காலத்தில் நடக்கின்ற செயல்பாடுகளைப் பின்னணியாக வைத்து கவிதைகள் (பாடல்கள்) புனையப்பட்டுள்ளன. வெறும் பொழுதுபோக்குப் பாடல்களாக மட்டும் இதனை எடுத்துக் கொள்ளாமல் எல்லோரும் மனதுக்குள்ளும் ஊடுருவிப் பாய்ந்து சென்று நல்ல நல்ல கருத்துக்களையும் அக்கருத்துக்களின்பால் பிறருக்கும் பால்வார்த்து இந்த அவனியில் அன்பும், நேசமும், அமைதியும் வெகுவாக தழைத்தோங்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

இந்நூலினைப் படித்துப் பாடல்களை மனதில் பதிய வைப்பதற்கு முன்னதாக இவ்வுலகில் அன்றாடம் நடக்கக்கூடிய நிகழ்வுகளையும், அண்மையில் நடந்த நிகழ்வுகளையும் மனக்கண்களின் முன்னால் கொண்டு வந்தாலே போதும், எனது கவிதை(பாடல்கள்) நூல் மிகவும் அவசியமானதொன்றாகும் என்று உங்கள் உதடுகள் முணுமுணுத்துக் கொள்ளும்.

நியாயமான அன்புகள், நேர்மையான பண்புகள், நீதிமாறாத நற்குணங்கள், நல்ல ஒழுக்கங்கள், இவற்றிற்கெல்லாம் மேலான ஈவு இறக்கங்கள் மனிதனால் இன்னும் சுவாசிக்கப்படவில்லையே என்பதுதான் இந்நூலில் மிகப்பெரிய கவலையாகும். இன்றைய காலகட்டத்தில் சராசரி ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் ஈவு இரக்கம் அபரிமிதமாய் மழைபோல் பொழிந்தால் போதும். அந்த மனிதனிடம் அன்பு, பண்பு, உண்மை, நேர்மை, ஒழுக்கம் எல்லாமே தானாகவே வந்து ஒட்டிக்கொள்ளும். அப்பேர்ப்பட்ட மகத்தான சக்தி கொண்ட ஈவு இரக்கம் வர வேண்டும் என்ற நோக்கில்தான் ” அன்பு பெருகட்டும்! மோதல் குறையட்டும்!! ‘என்று இந்நூலிற்கு தலைப்புக் கொடுத்து உள்ளோம். அன்பு பெருகினால் மோதல்கள் குறைந்து கொண்டே போகும் அல்லவா? இந்நூலினை இவ்வுலகம் திரும்பிப் பார்க்கும் என்று நம்புகிறேன்.

நன்றி….
காரை வீரையா

Additional information

Weight 0.15 kg
Dimensions 12 × 18 × 1 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “அன்பு பெருகட்டும் மோதல் குறையட்டும் !! காரை வீரையா !!!”

Your email address will not be published. Required fields are marked *

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top