எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் உட்பட தமிழக மீனவர்கள் 39 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
முன்னதாக நேற்றிரவு, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் 4 படகுகளிலும், புதுக்கோட்டையைச் சேர்ந்த 14 மீனவர்கள் 2 படகுகளிலும் காரைக்காலைச் சேர்ந்த 5 மீனவர்களும் ஒரு படகிலும் மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில், கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். இதை ராமேஸ்வரம் மீன்வளத் துறையும் உறுதி செய்துள்ளது.
அதேபோல் திரிகோணமலை அருகே காரைக்கால் மீனவர்கள் ஐவர், கச்சத்தீவு அருகே தூத்துக்குடி மீனவர்கள் 14 பேர் என மொத்தம் 19 பேர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 39 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982