சென்னை: ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, கீரனூர் சரகம், சீமானூர் கிராமத்தில் 23-4-2023 அன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, இச்சிக்காமாலைப்பட்டியைச் சேர்ந்த ஜெயந்த், த/பெ ஆறுமுகம் (வயது 21) என்கின்ற மாடுபிடி வீரர், மாடு முட்டியதில் உயிரிழந்தார் என்ற செய்தியினை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று அதில் கூறியுள்ளார்.

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982