புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நமக்கு நாமே திட்டத்தில் ஸ்மார்ட் போர்டு பெறுவதற்கு பங்களிப்புத் தொகை செலுத்தியும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநரக அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் சேந்தன்குடி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போர்டு பெறுவதற்கு ஊர் பொதுமக்கள் சார்பில் கடந்த ஜூன் மாதம் ரூ.33 ஆயிரத்துக்கு வங்கி வரைவோலை எடுத்து ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பிறகு, 4 மாதங்களாகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து இப்பணிகளை மேற்கொள்ளக் கூடிய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் விசாரித்தபோது, அங்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் இருப்பது தெரியவந்தது. எனவே, இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982